சென்னை நந்தனத்தில் 200 கிலோ பேரிச்சம் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர்ச் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி நந்தனம் சிஐடி நகரில், அப்பகுதி இளைஞர்களின் சார்பில் 200 கிலோ பேரிச்சம்பழம், முந்திரி, ஏலக்காய் மற்றும் ரூபாய் நாணயங்களைக் கொண்டு விநாயகர்ச் சிலை வடிவமைக்கப்பட்டது.
தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர்ச் சிலையை அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இது தொடர்பாகக் கூறிய அப்பகுதி இளைஞர்கள் எங்கள் ஒற்றுமையே இந்த விநாயகர்ச் சிலைக்கு சாட்சி எனப் பெருமிதத்துடன் கூறினர்.