அரிய வகைக் காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அரிய வகைக் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தியில் சீனா ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளளதால் உலக வர்த்தகத்தில் தனிச் செல்வாக்குடன் உள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள டிரம்ப், அரிய வகைக் காந்தங்களை அமெரிக்காவுக்குச் சீனா வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு வழங்கவில்லை என்றால், அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக ஏதாவது வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.