தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெட்ரோல் பங்கில் இரு பைக்குகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள போவன்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய போது இரண்டு பைக்குகள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தன.
அப்போது பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.