அசாம் மாநிலம் ஸ்ரீபூமியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்ரீபூமி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது காரின் எரிபொருள் டேங்கில் 10 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் 650 கிராம் ஹெராயின் போதைப்பொருளை மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துக் காரில் வந்த 4 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.