2038ம் ஆண்டுக்குள், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பன்னாட்டு தொழில்முறைச் சேவை வலையமைப்பான எர்ன்ஸ்ட் அண்ட் யங் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவின் பொருளாதாரம் 2030ம் ஆண்டுக்குள் 20 புள்ளி ஏழு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் எனக் கணித்துள்ளது.
மேலும், 2038ம் ஆண்டுக்குள் 34 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ள இந்தியா, உள்நாட்டுத் தேவையை நம்பியிருப்பதாலும், நவீனத் தொழில்நுட்பங்களில் திறன்களை அதிகரிப்பதாலும் அதிக வளர்ச்சி பெறும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு கூறியுள்ளது.