ரஷ்யா – ஜப்பான் சுனாமியைத் தொடர்ந்து பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றன. 2025ம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று கூறினார், அவை நடந்ததா? எதிர்காலத்தில் நடப்பவை என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“Nostradamus of the Balkans” என்று அழைக்கப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற, தீர்க்கதரிசியான பாபா வாங்கா, தனது விநோதமான கணிப்புகளால், கடந்த தலைமுறையை மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரையும் ஈர்த்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகளை வாங்கா முன்னரே கணித்திருந்தார்…. குறிப்பாக மியான்மர் நிலநடுக்கம், உலகளாவிய மக்களைப் பாதிக்கும் நில அதிர்வு பேரழிவுகள் பற்றிய அவரது பார்வையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.
அவரது கணிப்புகள் தெளிவற்றவை என்ற வாதங்களை ஒருதரப்பினர் முன் வைத்தாலும், அண்மையில் நடந்த பேரழிவுகள், அவரது தொலைநோக்குப் பார்வைக் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளன.
2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும் என்ற பாபா வாங்காவின் கணிப்பின்படி, அரசியல் ஸ்திரமின்மை, பிராந்திய மோதல்கள், உள்நாட்டுப் பிரச்னை, பொருளாதார ஸ்திரமின்மை ஏற்படும் என்ற நிலையில், இத்தகைய கணிப்புகள் வளர்ந்து வரும் மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த உலகளாவிய கவலைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
போர்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்கு மேலாக, 2025ம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு அவர்க் கணித்திருந்த நிலையில், தற்போதைய சர்வதேச அளவிலான பொருளாதார, அரசியல் நகர்வுகள் அதையே எடுத்துக் காட்டுவதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
2025ம் ஆண்டுக்குப் பிறகும் தொடரும் அவரது கணிப்புகள் 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்ற நிலைக்கு நீண்டிருக்கிறது. 2028ம் ஆண்டில் வெள்ளி கிரக ஆய்வும், புதிய ஆற்றல் வளங்களைக் கண்டறியும் சம்பவங்களும் நடக்கும் என்கிறது பாபா வாங்காவின் கணிப்பு.
2033ம் ஆண்டில் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயரும் என்றும், 2076ம் ஆண்டு பல நாடுகளில் கம்யூனிசம் பரவும் என்றும் கணித்திருக்கிறார். 2130ம் ஆண்டு வேற்று கிரகவாசிகள் அல்லது வேற்றுகிரகத்துடன் தொடர்பு ஏற்படும் என்பதும், 3005ம் ஆண்டு செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் வெடிக்கும் என்றும் கூறியிருப்பதும் வியப்பளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
2170ம் ஆண்டு உலகையே உறிஞ்சக்கூடிய கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்திருக்கிறார். 3797ம் ஆண்டு வாழத் தகுதியற்ற கிரகமாகப் பூமி மாறிவிடும் என்றும், மனிதர்கள் பூமியை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் பாபா வாங்கா கணித்திருப்பது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
5079ம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரப் போவதாக அவர் கணித்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. காலநிலை, தொழில்நுட்பம் மற்றும் மனிதப் பரிணாம வளர்ச்சி ஆகியவை ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளதைப் பாபா வாங்காவின் கால வரிசைக் கணிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது மனித நாகரிக வரலாற்றின் நீண்டதொலைவையும் படம் பிடித்து காட்டுவதாக உள்ளது.
பாபா வாங்கா 1996ம் ஆண்டு மறைந்திருந்தாலும், அவரது கணிப்புகள், இயற்கைப் பேரழிவுகள், வேற்று கிரகத் தொடர்பு மற்றும் சமூகப் பரிணாமம் பற்றிய அவரது கண்ணோட்டம், எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளைக் கண்முன் நிறுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.