பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரான்ஸ், ரஷ்யா இடையே வெடித்துள்ள வார்த்தைப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அப்படியென்ன நடந்தது… விரிவாகப் பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்…. அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தி மற்றொரு பக்கம் காய்களை நகர்த்தி வருகின்றன.

அண்மையில் பிரெஞ்ச் டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ரஷ்யாவைப் பொது எதிரி என்று அவர் அடையாளப்படுத்தியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ரஷ்ய அதிபரைப் பிரிடேட்டர் (predator) என்றும், ogre at our doorstep என்றும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு ரஷ்யாவும் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புதினின் ஆதரவாளரும், கிரெம்ளிக் ஆதரவு தொலைக்காட்சி தொகுப்பாளருமான விளாடிமிர்  சோலோவியோவ் (Vladimir Solovyov), அரசு தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியின்போது, பிரான்ஸை அச்சுறுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினார்.

பிரான்ஸை ரஷ்யா கைப்பற்றினால், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிகாரிகளின் காலணிகளைத் துடைத்து சுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவார் என்றும், பிரான்ஸ் அதிபர் மாளிகையான எலிசேவில் ரஷ்ய வீரர்களை நிறுத்துவது பற்றியும் விளாடிமிர்ச் சோலோவியோவ் விவரித்திருந்தார்.

சோலோவியோவின் பேச்சை அங்கீகரித்துள்ள ரஷ்யாவின் அரசியல் விஞ்ஞானியான (Sergei Mikheyev) செர்ஜி மிகீவ்,ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பா எந்தச் சமரசத்தையும் எதிர்பார்க்ககூடாது என்றார். மேலும், உக்ரைனில் தரைப்படைகள் இருக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பிய சோலோவியோவ், European mangy animals உக்ரைன் வரக் காரணம் என்ன? அவற்றை மீண்டும் அங்கேயே புதைக்க முடியுமா என்று ஐரோப்பிய நாடுகளை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை உபயோகித்தார்.

ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எனக் கடந்த காலங்களிலும் சோலோவியோவ் பேசியிருக்கிறார். தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குக் கடுமையான பதிலடி தரும் வகையில் அவர் பேசியது இருநாடுகளுக்கு இடையே வார்த்தைப் போராக மாறியுள்ளது.

ஒரு நாட்டின் அதிபரை, அரக்கன் என்று பிரான்ஸ் அதிபர் விமர்சித்திருப்பதில் இருந்து தொடங்கிய இந்த வார்த்தைப் போரானது, மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு அச்சாரமிட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் சமூகம் கருதுகிறது.

Tags: Russia war of words: Is it leading to a new war?ரஷ்யா வார்த்தை போர்Francerussiaரஷ்யா - உக்ரைன் போர்ரஷ்யாபிரான்ஸ்
Share
Tweet
SendShare
Previous Post

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

Next Post

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies