அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!
Oct 26, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 08:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் H-1B, GREEN CARD மற்றும் STUDENT AND EXCHANGE விசாக்களில், அந்நாட்டு அரசு பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அந்த மாற்றங்கள் என்னென்ன? அது இந்தியர்களிடையே எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடியேற்ற விசா முறையில் பெரும் மாற்றங்கள் வர உள்ளன. அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், H-1B என்ற வேலைவாய்ப்பு விசா, நிரந்தரக் குடியேற்றத்திற்கான கிரீன் கார்டு முறை, மாணவர் மற்றும் பரிமாற்ற விசா ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட மாற்றங்களுடன் புதுப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க வேலை வாய்ப்புகளில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கி, வெளிநாட்டுக் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக H-1B வேலைவாய்ப்பு விசாவில் தற்போது நடைமுறையில் உள்ள லாட்டரி முறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதில் ஊதியம் அடிப்படையிலான முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி அதிக ஊதியம் பெறும், அதிகத் திறனுடைய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தர ஊழியர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போதைய H-1B விசாக்களில் சுமார் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுவதால், இந்த மாற்றம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் பெரிய சவாலை முன்னிறுத்தியுள்ளது.

கிரீன் கார்டு முறையிலும் தற்போதைய வருமான அடிப்படையிலான குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் விமர்சித்து வருகிறது. அதன்படி புதிய GOLD CARD திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நபர்களுக்கு நேரடியாக நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குடும்பம் மற்றும் வேலை அடிப்படையிலான குடியேற்றத்தைக் குறைத்து, முதலீடு மற்றும் திறமை அடிப்படையிலான குடியேற்றத்தை முன்னிலைப்படுத்தும் என டிரம்ப் நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மாணவர் மற்றும் பரிமாற்ற விசாக்கள் (STUDENT AND EXCHANGE VISA) வழங்குவதிலும் அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாணவர் மற்றும் பரிமாற்ற விசாக்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரைக் கால வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஊடக விசாக்களுக்கான கால அவகாசம் 240 நாட்களாகக் குறைக்கப்படுவதுடன், சீனப் பத்திரிகையாளர்களுக்கு வெறும் 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்தக் கால வரம்பைத் தீவிர கண்காணிப்பின் கீழ், அவர்கள் நீட்டித்துக்கொள்ள முடியும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா விவகாரத்தில் அமெரிக்க அரசின் இந்த மாற்றங்கள் இந்தியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். H-1B வேலைவாய்ப்பு விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களைப் பெறும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அந்த வகையில் ஊதியம் அடிப்படையிலான விதிகள் அமெரிக்க நிறுவனங்களை, இந்தியாவில் கிளை அலுவலகங்கள் தொடங்கவோ அல்லது தொலைதூர வேலை முறையை அதிகரிக்கவோ தூண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மாணவர் விசா காலவரம்பு அவர்களுக்கு அதிகச் சிக்கல்களை உருவாக்கும் எனவும், நிரந்தரக் குடியேற்ற பாதைகள் குறுகுவதால், பல தொழில்முனைவோரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அரசு மேற்கொள்ளவுள்ள இந்த மாற்றங்கள் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக்குவதோடு, உலகளாவிய திறமைசாலிகளை ஈர்க்கும் மையம் என்ற அந்தஸ்தையும் அமெரிக்காவிடம் இருந்து பறிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: டிரம்ப் நிர்வாகம்Dramatic changes to US visa system: Trump administration will increase problems for Indiansஅமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள்IndiausaDonald TrumpTrump
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

Next Post

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies