பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற 3 நாள் கருத்தரங்கு தொடரில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவரிடம் ஆர்எஸ்எஸ், பாஜக இடையே ஏதேனும் மோதல் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மோகன் பகவத், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எந்த மோதலும் இல்லை என கூறினார். மத்தியில் மட்டுமல்லாமல் மாநில பாஜக அரசுகளுடனும் RSS நல்ல ஒருங்கிணைப்பை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் தேசிய தலைவரை அக்கட்சியே தேர்வு செய்யும் என கூறிய மோகன் பகவத், பாஜகவின் தேசிய தலைவர் தேர்வு தாமதம் ஆவதற்கு ஆர்எஸ்எஸ் காரணம் இல்லை எனவும் விளக்கமளித்தார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் 75 வயதானவர்கள் ஓய்வுபெற வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் 75 வயதில் ஓய்வுபெற்றுவிடுவென் என்றோ, மற்றவர்கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்றோ ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்தார்.
தனது 80 வயதில், ராஷ்டிரிய சேவா சங்கம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறதோ, அதை செய்ய தயாராகவே இருப்பேன் என்றும் மோகன் பகவத் உறுதிபட தெரிவித்தார்.