உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜப்பான் நாட்டின் வணிகத்திற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது என தெரிவித்தார்.
ஏஐ, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் கூறினார்.
ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் எனக்கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் பொருளாதாரம், அரசியலில் நிலைத்தன்மை நிலவுகிறது என தெரிவித்தார்.