1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள ஜோர்டானின் ஜெராஷில் உள்ள ஒரு கூட்டுப் புதைகுழியில், பிளேக்கை உண்டாக்கும் யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியத்தின் நேரடி மரபணு ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் அட்லாண்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு துறைசார் குழு இணைந்து ஜோர்டானின் பண்டைய நகரமான ஜெராஷ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள புதைக்குழியில் ஆய்வுமேற்கொண்டபோது கி.பி 541 முதல் 750 வரை காலக்கட்டத்தில் பிளேக் நோயை உண்டாக்கிய யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவின் நேரடி மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செமி கண்டக்டர் ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். CG பவர் நிறுவனம் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் குஜராத்தில் தனது முதல் செமி கண்டக்டர் ஆலையை நிறுவியுள்ளது.
அந்த ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலையிலிருந்து நமக்குச் சிப்கள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.