மாதம்பட்டி ரங்கராஜ் தன்னையும் தனது குழந்தையையும் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் பிரபல உணவக உரிமையாளர் மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் க்ரிசில்டா புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது கணவரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதம்பட்டி ரங்கராஜுடன் முறைப்படி திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு முன் திடீரென அவர் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தனக்கும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பதில் கேட்டுப் புகார் அளித்துள்ளதாக ஜாய் க்ரிசில்டா தெரிவித்தார்.