ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் காவல் உயர் அதிகாரி வாகனத் தணிக்கையின்போது பிடிபட்டார்.
ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சைரனுடன் வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் இருந்தவர் தன்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏடிஜிபி சுப்ரியோ முகர்ஜி என்றும், தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்டார். இதையடுத்துச் சந்தேகம் அடைந்த போலீசார், அடையாள அட்டை, சீருடையை ஆய்வு செய்ததில் அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது.
இதையடுத்துக் காரில் இருந்த இரண்டு செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஏர்ப் பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார்ப் பறிமுதல் செய்தனர்.
கடந்த 3 மாதங்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர்ப் போலீஸ் அதிகாரி போல் நடித்துப் பிடிபட்டது இது இரண்டாவது முறை என்று ராஜஸ்தானைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே போலி அதிகாரிகளிடம் கவனமாக இருக்குமாறு பொது மக்களை எச்சரித்துள்ளனர்.