இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் விமர்சித்துள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதித்த நிலையில், ரிச்சர்ட் வோல்ஃப் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். ரஷ்ய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்கா இந்தியாவுடனான தொடர்புகளை நிறுத்தினால், இந்தியா தனது ஏற்றுமதிகளை விற்க வேறு இடங்களைக் கண்டுபிடிக்கும் என்றும், இந்த நடவடிக்கை பிரிக்ஸ் நாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் வோல்ஃப் தெரிவித்தார்.
சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் நாடுகள் உலக உற்பத்தியில் 35 சதவீதமாக உள்ளது என்றும், G7 நாடுகள் சுமார் 28% ஆகக் குறைந்துள்ளதாகவும் வோல்ஃப் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா சொல்வது, எலி, யானையை அடிப்பது போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.