ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!
Oct 15, 2025, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் நடைபெறவுள்ள 2ம் உலகப்போரின் வெற்றித் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை 2ம் உலகப்போர் நடைபெற்றது. 6 ஆண்டுகளாக நடைபெற்ற அந்தப் போர், ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்த வெற்றித் தினம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகப்போரின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்காக, சீனாவில் மிகப்பெரிய அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், உலகிற்குத் தனது ராணுவ வலிமை எடுத்துக்காட்டும் வகையில் சீனா இந்த அணிவகுப்பை மேற்கொள்ளவுள்ளது.

அணிவகுப்பில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும், நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பில், புதின், கிம் ஜாங் உன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். ஒரே மேடையில், சீன அதிபர், ரஷ்ய அதிபர், வடகொரிய அதிபர்  தோன்றவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தகைய அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர்  கலந்துகொள்கிறார். மேலும் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்தால், முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வில் மோடி பங்கேற்க முடியும். ஆனால், மோடி அவ்வாறு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஜப்பான்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்ததால்தான் 2ம் உலகப்போரே முடிவுக்கு வந்தது. அந்தக் கொண்டாட்டம்தான் சீனாவில் நடைபெறவுள்ளது. அதில் மோடி கலந்துகொண்டால், ஜப்பானுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும். இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை அது பாதிக்கவும்கூடும்.

இந்தியாவின் நம்பகமான நாடுகள் குறித்து பட்டியலிட்டால், அதில் கட்டாயம் ஜப்பான் இடம்பெறும். ஆனால், சீனா அப்படியல்ல. எப்போது அது எல்லைப் பிரச்னையில் ஈடுபடும், பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை ஆயுதங்களை வழங்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் தடையாக இருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது.

எனவே, சீனாவின் அணிவகுப்பில் கலந்துகொண்டு அந்நாட்டிடம் நட்புகரம் நீட்டுவதைக் காட்டிலும், ஜப்பானுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கியம் என்பதை இந்தியா கவனத்தில் கொண்டு செயல்பட்டுள்ளதாக ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

Tags: India skips Chinese military parade for Japanசீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா2ம் உலகப் போரில் வெற்றி தின அணிவகுப்புchinajappanசீனாpm modi visit jappan
ShareTweetSendShare
Previous Post

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

Next Post

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Related News

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies