தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் விவசாயிகள் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்ற நிலையில், வனத்துறையைக் கண்டித்து ரேசன் அட்டையுடன் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், குறைதீர் கூட்டத்தை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைந்து பயிர்களைத் தேசப்படுத்தி வருவதாகவும், இதனால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வனத்துறையிடம் முறையிட்டால், வனவிலங்குகளுடன் பழகிக் கொள்ளுமாறு அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், வனத்துறையைக் கண்டிக்கும் வகையில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டியப்படி மனு அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.