முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்பத்திற்கான முதலீடுகளைச் செய்யவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்
4 முறை வெளிநாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சொல்லும்படியாக ஏதாவது முதலீடுகளை ஈர்த்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்களால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்று தொழில்துறையினர்க் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் போல் இல்லாமல் இம்முறைத் தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.