சீனாவின் தியான்ஜினில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வியாழன் அன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
இதனையடுத்து சீனாவில் இன்று நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, டோக்கியோவில் இருந்து தனி விமானம் மூலம் சீனாவின் தியான்ஜின் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் தியான்ஜின் விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்வாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சீன கலைஞர்கள் இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். இதையடுத்து பரதநாட்டியம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.