ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இது குறித்து பேசிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டு நடந்த போரின் போது அழிக்கப்படாத இலக்குகளும் அழிக்கப்பட்டதாக கூறினார். அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50-க்கும் குறைவான ஆயுதங்களை ஏவியதாக கூறிய அவர், அதற்கே பாகிஸ்தான் ராணுவம் நம்மிடம் போர் நிறுத்தத்திற்கு கோரியதாக தெரிவித்தார்.
மேலும் முக்கிய பயங்கரவாத தலைவர்களின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய நர்மதேஷ்வர் திவாரி இது, பாகிஸ்தான் அரசு, நேரடியாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் சாட்சி என கூறினார்