நடிகர் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வரும் வா வாத்தியார் திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில், கீர்த்தி ஷெட்டி கதாயகியாக நடிக்கும் இப்படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.