திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகவும், மேயரை காப்பாற்ற கண்துடைப்பிற்காக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை என்றும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்காத நாளே இல்லை எனவும் அவர் சாடினார்.
தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக விளங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.