விருதுநகர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் காரில் நுழைந்த திமுக சேர்மனின் சகோதரர், இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றியதால் கண்ணாடியை உடைத்து தொண்டர்கள் சேதப்படுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், விருதுகரின் காரியாபட்டியில் இபிஎஸ் சிறப்புரை ஆற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது திமுக பேரூராட்சி சேர்மன் செந்தில் என்பவரின் சகோதரர் சௌந்தர் கூட்டத்திற்குள் காரை ஓட்டி வந்துள்ளார். அதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பின்புறம் செல்வதற்காக முயன்ற போது, ஆக்சிலேட்டரை அழுத்தியதில் காவல் ஆய்வாளர் காலில் காரை ஏற்றிவிட்டு அத்துமீறி கூட்டத்திற்குள் காருடன் செல்ல முயன்றார். அப்போது காரின் கண்ணாடியை அதிமுக தொண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
விசாரணையில் சௌந்தரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.