திருப்பூரில் பாறைகுழிகளில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைப் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைகுழிகளில் கொட்டப்படுகின்றன.
இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், குப்பைகளைக் கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்திய பொதுமக்கள் காங்கேயம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்ததால், நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் அசாதாரண சூழல் நிலவியது.