டெல்லியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 650 மாணவர்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 3 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்தனர்.
டெல்லியில் பாரம்பரியம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 3 நிமிடங்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் உலகச் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, டெல்லி, மும்பை, தெலங்கானா, ஹரியானா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 650 மாணவர்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலகச் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக “பாரம்பரியம் வேர்ல்ட் ரெக்கார்ட்” சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனிடையே நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த சிலம்ப ஆசிரியர்கள் அமைப்புகள், மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய சிலம்ப பயிற்சி அமைப்பின் தேசிய பொருளாளர் சண்முகம், மாநில அரசு நடத்தும் விளையாட்டு போட்டிகளில் சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமெனக் கூறினார்.