கேரளாவில் அம்பீக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அம்பீக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் மூன்று மாத குழந்தை உட்பட இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குக் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அரிய வகைக் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைப் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து அம்பீக் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.