இ-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்தும், பழைய வாகனங்களுக்கு எத்தனால் இல்லாத பெட்ரோல் வேண்டும் எனக் கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2025-26ம் ஆண்டுக்குள் மாசுபாட்டைக் குறைக்கவும், எண்ணெய் இறக்குமதியில் பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.