தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் யூரியா வழங்க கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை நிவர்த்தி செய்யக் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள், விவசாயிகள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காமரெட்டி மாவட்டத்தில் யூரியாவுக்காகக் குழந்தைகளுடன் விவசாயிகள் காத்திருந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் யூரியா வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த நூற்றக்கணக்கான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.