நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டடங்களும் சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கட்டான சூழலில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா 21 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.
அந்தப் பொருட்களை அனைத்தும் தலைநகர் காபூலை சென்றடைந்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர்வைகள், கூடாரங்கள், மருந்துப் பொருட்கள், ஜெனரேட்டர்கள், குடிநீர்ச் சுத்திரிப்பான்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளதாகவும், ஆப்கன் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.