வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
தலைநகர் டெல்லியில் பெய்த கனமழைக் காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள நிகம் போத் காட் மைதானம் முழுவதும் வெள்ள நீர்ச் சூழ்ந்ததது.
இந்த மைதானத்தில் அமைந்துள்ள கோயில் கோபுரங்களை மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.
இதே போல உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழைக் காரணமாக அயோத்தியில் உள்ள சரயு நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தொட்டபடி தண்ணீர்ச் செல்கிறது. இதனால் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதே போல ஜம்மு – காஷ்மீரிலும் தொடர்ந்து கனமழைக் கொட்டி தீர்த்தது. இதனால் அக்னூரில் உள்ள செனாப் நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜியா போட்டா காட் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆற்றின் கரையோரமாக இருந்த கோயில்களையும், கட்டிடங்களையும் மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் குல்லு பகுதியில் கனமழைக் கொட்டி தீர்த்தது. மலைப்பாங்கான இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டின் ஒருபகுதி இடிந்தது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..ஹரியானாவில் இடைவிடாது பெய்த கனமழைக் காரணமாக அம்பாலா பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் மின்சாதனப் பொருட்கள் சேதமாகியதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்தனர்.