டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பைஅவர் தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலிவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான நட்பை வலுப்படுத்த அமெரிக்கா நீண்ட காலமாகப் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார். சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியவின் நட்பு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து பாகிஸ்தான் தொழில் செய்ய விரும்பியதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே இந்தியா உடனான உறவை டிரம்ப் தூக்கி எறிந்து விட்டாதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்களுக்கும் இதே நிலைமை வருமோ என கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் சலிவன் குறிப்பிட்டுள்ளார்.