திண்டிவனத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நகராட்சி ஊழியரை திமுக கவுன்சிலர்க் காலில் விழவைத்த சம்பவத்துக்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அரசு ஊழியர்களை திமுக அரசு அவமானப்படுத்துவது இது முதல்முறை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களிலே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அரசு ஊழியர் ஒருவரைச் சாதி ரீதியாகத் திட்டியதையும் அண்ணாமலைத் தனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
திமுக அரசுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்த அண்ணாமலை, சமூக நீதி எனக் கூறி சமூக அநீதியை திமுக அரசு இழைத்து வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.