திருச்சி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அடுத்த சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.
அப்போது ஹரண்குமார், சற்குணம் ஆகிய இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துத் தனது 3 நண்பர்களுடன் இணைந்து ஹரண்குமாரை சற்குணம் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஹரண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்துச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சற்குணம், சஞ்சய் உட்பட 4 பேரை கைது செய்தனர்.