கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பேருந்திற்காகக் காத்திருந்த மூதாட்டி மீது அதிவேகத்தில் வந்த கார் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அருகே நின்றிருந்த பெண்ணும் காயமடைந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.