புதுச்சேரியில் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தும் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளி மாணவர் அவதிப்பட்டு வருகிறார்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ராஜகுரு, நீட் தேர்வில் வெற்றிப் பெற்றார். அவருக்கு அரசு இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
அரசு சார்பில் கல்வி கட்டணமாக 4 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டாலும், புத்தகம், சீருடை உள்ளிட்டவைக்காகக் கூடுதல் கட்டணமாக இன்னும் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
மாணவர் ராஜகுரு குடும்பம் ஏழ்மையில் உள்ளதால், அவரால் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
எனவே, மருத்துவ படிப்பு பயில மாணவர் ராஜகுருவுக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.