டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்நிலையில் வாஷிங்டனில் இந்திய தூதர் விநய் மோகன் கவாட்ராவை, அமெரிக்க காங்கிரஸ் எம்பி கிரெகரி மீக்ஸ் சந்தித்தார்.
அப்போது இருதரப்பு உறவுகளை ஆழமாக்கத் தங்களின் ஆதரவினைத் தெரிவித்தார். இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நட்பை உறுதி செய்ததாகக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கக் காங்கிரஸ் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்க் கூறினார்.
இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பு குறித்து கவலைத் தெரிவித்ததாகவும் அவர்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிரம்பின் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிரெகரி மீக்ஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வினய் மோகன் கவாட்ரா, கிரெகரி மீக்ஸின் ஆதரவு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.