தனது குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் மத்தியில் உரையாடிய அவர், முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இண்டி கூட்டணி என கூறி கொள்ளும் ஸ்டாலின் கேரள முதல்வரிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், தனது குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் என்றும் கூறினார்.