டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு, CISF வீரர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முகமது மொக்தார் ஆலம் என்ற பயணி, கயாவுக்குச் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட அவர், அங்கேயச் சரிந்து விழுந்தார்.
இதைக்கண்ட CISF வீரர், சிபிஆர்ச் சிகிச்சை அளித்து பயணியைக் காப்பாற்றினார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துரிதமாகச் செயல்பட்ட CISF வீரரை பலரும் பாராட்டி வருகின்றனர்.