முதலமைச்சர் ஸ்டாலின் லண்டனுக்குச் சென்று சமூக நீதி பேசுகிறார் என்றும், அவர் ஆளும் தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்குச் சமூக நீதி இல்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை துறைமுக நுழைவாயில் உள்ள வ.உ.சியின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியவர்,
சிதம்பரனாருக்கு மரியாதை செய்ய தகுதியான ஒரே கட்சி பாஜக மட்டும் தான் எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் நாட்டைக் காப்பதற்காக போர் கப்பல்களை விட்டிருப்பதை வ உ சிக்கு சமர்பிக்கிறோம் எனத் தெரிவித்தார்.
லண்டனில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து சமூக நீதி பற்றிப் பேசி வரும் நிலையில் திண்டிவனத்தில் பட்டியலினத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை காலில் விழ வைப்பது தான் சமூக நீதியா? எங்கே இருக்கிறது சமூக நீதி என்றார். சமூக நீதியை பற்றி லண்டனில் பேசாமல் முதலில் தமிழகத்தில் பேசுங்கள் என விமர்சனம் செய்தார்.
ஜி எஸ் டி குறைக்கப்பட்டதால் அடிப்படைப் பொருள்களின் விலை குறைய உள்ளது. இந்நேரத்தில் திமுக அதன் கூட்டணி கட்சியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாக் கட்சிகளும் மயான அமைதியில் தற்போது இருந்து வருகிறார்கள்.
மக்களுக்கான கட்சியாகவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கும் கட்சியாகவும், பட்டியலினத்தவரின் கட்சியாகப் பாஜக மட்டுமே இருந்து வருவதாக குறிப்பிட்டார்.
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்திருப்பது போல் பாஜகவில் 18 கோடி பேரில் ஒருவர் தான் தலைவராக வர முடியும், அப்படி திமுகவில் சொல்ல முடியுமா என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
திமுக குடும்பத்தில் உதய நிதி சி ஓ ஆவரு அடுத்து சி எம் ஆவாரு, ஆனால் நாங்கள் விட மாட்டோம் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையன் அவர் சார்ந்த கட்சி தலைவருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார், அது உட்கட்சி சார்ந்த விஷயம், பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.