ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார்.
ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக மே மாதம் 7-ம் தேதி ஆப்ரேஷன் சந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இலக்குகளை நோக்கி இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியது.
இந்த நடவடிக்கை இந்திய எல்லைகளில் இருந்து இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டுள்ளார்.