ஜிஎஸ்டி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 330 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார்.
இதில் கிட்டத்தட்ட 202 லட்சம் கோடி ரூபாய் நுகர்விலிருந்து பெறப்படும் நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பிறகு நுகர்வு 10 சதவீதம் அதிகரித்தாலும் கூட, அது அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயை உயர்த்தும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.