மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!
Aug 6, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, ட்ரம்ப் நிர்வாகம் உளவு பார்க்க முயன்று தோல்வியைத் தழுவியது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை  தற்போது பார்க்கலாம்.

வடகொரியா தொடக்கம் முதலே ஒரு மர்மமான நாடாக இருந்து வருகிறது. அங்கு என்ன நடக்கிறது?, அங்குள்ள தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?, ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? என்பது குறித்த எந்தத் தகவலையும் அத்தனை லேசில் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது.

அவ்வபோது ஏவுகணைகளை  செலுத்தி அந்நாடு சோதனை  செய்யும். தென்கொரியாவுடன் ஏதாவது வம்பிழுக்கும். ரஷ்யாவுடனோ, சீனாவுடனோ ஆயுத வர்த்தகம் மேற்கொள்ளும். இந்த அளவிலான செய்திகள் மட்டும்தான் ஊடகங்களில் வெளியாகும். மற்ற விஷயங்கள் எல்லாம் பரம ரகசிமாகவே இருக்கும்.

வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதே குதிரை கொம்பான விஷயம் என்றால், அதன் அதிபர்  கிம் ஜாங் உன் என்ன செய்கிறார் என்பதை அறிவது எல்லாம் நடக்காத காரியம். ஆனால், அந்தக் காரியத்தை நடத்தி முடிக்க முயன்று ட்ரம்ப் மண்ணை கவ்விய செய்தி தற்போது வெளியே கசிந்துள்ளது.

2019ம் ஆண்டு முதன்முறையாக டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னை சந்தித்தார். அமெரிக்க அதிபர் வடகொரியா செல்வது அதுவே முதல்முறை. தனது பயணத்திற்கு முன்னதாக, கிம் ஜாங் உன்னை உளவறிய முடிவெடுத்தார் டிரம்ப்.

ஆனால், அது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். எனவே, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க seal team 6-ஐ களமிறக்கினார். காதும் காதும் வைத்ததுபோல் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை இந்த seal team 6 அமைப்பிடம்தான் அமெரிக்க அதிபர்கள் ஒப்படைப்பார்கள்.

ஆனானப்பட்ட ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து கதையை முடித்ததே இந்த seal team 6 அமைப்புதான். இதில் இருந்தே இந்த அமைப்பின் ஆற்றலை புரிந்துகொள்ளலாம். இந்த அமைப்பின் வீரர்கள் வடகொரிய அதிபரை உளவறியும் மிஷனை செய்து முடிக்க ஒப்புக்கொண்டனர்.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் மூலம் வடகொரிய எல்லைக்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர், சிறிய கப்பல்கள் மூலம் வடகொரியாவுக்குள் பயணிக்க
வேண்டும். அங்கு குறிப்பிட்ட இடங்களில் ஒட்டுகேட்பு கருவிகளை பொருத்த வேண்டும். இதுதான் ப்ளேன்.

திட்டமிட்டபடியே seal team 6 வீரர்கள் வடகொரிய கடற்பகுதிக்குச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கப்பல் ஒன்று வந்துவிட்டது. அதனை வடகொரிய கடற்படையின் கப்பல் எனக் கருதிய அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி, கப்பலில் இருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.

உடல்கள் மிதக்காமல் இருக்க, கொல்லப்பட்டவர்களின் நுரையீரல்களை கிழித்து கடலில் மூழ்கடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அமெரிக்கா திரும்பிவிட்டனர். திட்டம் படுதோல்வி.

இன்றைக்கு இருப்பது போன்ற மேம்பட்ட தொல்நுட்ப வசதிகள் அமெரிக்க வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. இது தவிர்த்துத் தெளிவான செயற்கைக்கோள் புகைப்படம் இல்லாததால், இலக்கை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டம் தோல்வியடை இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

பின்னர்தான் தெரிந்தது, அந்தக் குறிப்பிட்ட கப்பலில் வந்தவர்கள் சாதாரண குடிமக்கள் என்பது. குடிமக்களைதான் அமெரிக்க வீரர்கள் கொன்று குவித்திருந்தனர். இது நடந்தது 2019ம் ஆண்டு.

அமெரிக்காவின் உளவு முயற்சி தோல்வியடைந்த செய்தி 6 வருடங்கள் கழித்து தற்போதுதான் வெளியே கசிந்துள்ளது. மேலும், பொதுமக்களை கொன்ற அமெரிக்காவின் செயலுக்குக் கண்டனமும் வலுத்து வருகிறது.

Tags: மண்ணை கவ்விய ட்ரம்ப்தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன்Donald TrumpTrump who covered the ground: A failed spy operationதோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

Next Post

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies