பீகாரில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதற்காகச் சென்ற காங்கிரஸ் எம்.பியை விவசாயிகள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் மழைக் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகச் சென்றார்.
அப்போது தண்ணீர்த் தேங்கிய சாலையில் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாரிக் அன்வரை விவசாயிகள் தோளில் சுமந்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாகப் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவரான குரு பிரகாஷ் பஸ்வான், காங்கிரஸ் என்பது சலுகைப் பெற்ற வம்சத்தின் அமைப்பு எனவும் பீகாரியின் உணர்வை அவமதிப்பதிப்பதற்கான எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் கட்சி விடவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.