வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளின் ஒரு பகுதிதான் இது.
தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கொடைக்கானலில் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் வார விடுமுறையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பாக பிரையண்ட் பூங்கா, மோயர் சதுக்கம், கோக்கர்ஸ் வாக், ரோஜா தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சாரல் மழைப் பெய்த நிலையில் குடைப் பிடித்தப்படி குணா குகை மற்றும் பைன் ஃபாரஸ்ட் பகுதிகளைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் சாரல் மழையில் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.