உத்தரபிரதேசத்தில் ஹெல்மெட் இல்லாத பெண்ணுக்குப் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குப் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று அண்மையில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் இல்லை” என்ற திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோரக்பூர் நகரில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.
அப்போது அப்பெண்ணிடம் தலைக்கவசம் இல்லாததை அறிந்த பங்க் ஊழியர் பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் ஊழியருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்தப் பெண், பெட்ரோல் பம்ப் ஊழியரை தாக்கினார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் வாகன ஓட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.