கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய் பரவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
கதிர்வீச்சு காரணமாக 3 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகப் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறிய அவர்கள், ஊரை விட்டு காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளனர்.