ஆந்திராவில் ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்துகின்றனர்.
இந்நிலையில். ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தலைவாழை இலையில் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 100 விதமான உணவு வகைகள் கல்லூரி பேராசிரியர்களுக்குப் பரிமாறப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.