திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் அருகே கடையின் ஓட்டைப் பிரித்து ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காக்களூர் பேருந்து நிலையம் அருகே விக்கி என்பவர்ச் செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனைச் செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு மறுநாள் காலை வந்த பார்த்தபோது கடையின் மேல்பகுதியில் உள்ள ஓட்டினை பிரித்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக விக்கி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.