பஞ்சாப் கிங்ஸ் அணியில் தான் அவமதிக்கப்பட்டதாக, ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெயில் குற்றம்சாட்டியுள்ளார்.
தி யுனிவர்சல் பாஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் கிறிஸ் கெயில், 2018ம் ஆண்டில் 2 கோடி ரூபாய்க்குப் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
பஞ்சாப் அணியில் 41 போட்டிகளில் விளையாடி, 36 சராசரி மற்றும் 143 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆயிரத்து 339 ரன்களை கிறிஸ் கெயில் எடுத்துள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை கிறிஸ் கெயில் பகிர்ந்துள்ளார்.
அப்போது தனது ஐபிஎல் பயணம் திடீரென முடிவுக்கு வந்ததாக ஒப்புக்கொண்ட அவர், பஞ்சாப் அணியால் தான் அவமதிக்கப்பட்டதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினார்.