நாகையில் மழையின் காரணமாக 9 ஆயிரம் ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே விளைவிக்கப்படும் உப்பு, லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்கள் முழுவதும் மழை நீர் தேங்கியது.
இதனால் 9 ஆயிரம் ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.