குடும்ப வன்முறைக் குறித்து டிரம்பின் கருத்துக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் குற்றங்களைக் குறைக்க அதிபர் டிரம்ப் 800 பேர் கொண்ட காவல்படையைக் களமிறக்கினார்.
இது குறித்த பேசிய அவர், காவல்படையினரால் வாஷிங்டனில் குற்றங்கள் குறைந்ததாகத் தெரிவித்தார். தனது நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்துவதற்காக எதிர்கட்சியினர்க் குடும்ப வன்முறையைப் பயன்படுத்துவதாகவும் அவர்க் கூறினார்.
கணவன் மனைவிக்கு இடையே சிறிய சண்டை இருந்தால், அது குற்ற சம்பவம் என்று எதிர்கட்சியினர்க் கூறுவதாக குறிப்பிட்ட அவர், குடும்ப வன்முறையைக் குற்றமாக கருதக் கூடாது எனத் தெரிவித்தார்.
டிரம்பின் இந்தச் செயலுக்கும் கருத்துக்கும் அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெருநகரக் காவல்துறையை டிரம்ப் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் பிரையன் ஸ்வால்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் டிரம்ப் நிர்வாகம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதேபோல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் டிரம்ப் கூறுவது போல் வாஷிங்டனில் குற்றங்கள் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
காவல்துறை தரவுகள் படி கொலை, கொள்ளை என வாஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.